நயன்தாராவின் திருமண ஆவணப்படம்.. திடீரென வெளியான முக்கிய அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியின் வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், தற்போது இந்த ஆவணத்திற்காக திரைப்பட வீடியோக்களை கொடுத்து உதவிய தயாரிப்பாளர்களுக்கு தனது நன்றியை நடிகை நயன்தாரா தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
"நமது ஆவணப்படம் வெளியாகி உள்ளது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரை பயணத்தில் நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றி அமையாது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும் ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று உங்களை அணுகியபோது, எந்த விதமான தயக்கமோ தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்," என்று கூறி, அனைத்து தயாரிப்பாளர் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஷாருக்கான், பாலச்சந்தர், சுபாஷ்கரன், ஐசரி கணேஷ், கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com