ஆரம்பமானது நயன்தாராவின் அடுத்த மெகா பட்ஜெட் படம்

  • IndiaGlitz, [Sunday,March 18 2018]

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார். அஜித்தின் விசுவாசம், கமல்ஹாசனின் 'இந்தியன் 2', ரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படம், ஈரம்' அறிவழகனின் படம், 'அறம் 2' படம் உள்பட பல படங்களில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றான 'நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா தற்போது கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவின் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்க தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போராடிய உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான இந்த படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஜெகபதி பாபு, கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை ராம்சரண் தேஜா தயாரிக்கின்றார். இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

More News

கமல்-விஷால் திடீர் சந்திப்பு: வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையா?

தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது ஸ்டிரைக் அல்ல, சில திருத்தங்கள்: விஷால் நீண்ட விளக்கம்

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவில் புதிய படங்க்ள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை, அதுமட்டுமின்றி சென்னையை தவிர தமிழகம் முழுவதும் தியேட்டர்களும் இயங்கவில்லை

இனிமேல் தினகரன் அணியில் இல்லை: ஆணையிட்டு உறுதி செய்த நாஞ்சிலார்

டிடிவி தினகரனின் வலது கரமாகவும், அவரை தமிழக முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என்றும், அவருக்கு ஆதரவு கொடுப்பதால் என்னை காரி துப்பினாலும் அதை துடைத்தெறிந்துவிட்டு தினகரனின் கரங்களை வலுப்படுத்துவேன்

தமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி: கரு.பழனியப்பன்

தமிழக அரசியலில் வேறு எந்த நபரும் அரசியலுக்கு வருவதாக கூறியபோது வராத எதிர்ப்பு ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியவுடன் வந்துள்ளது.

திராவிட நாடு பிரச்சனையால் திட்டு வாங்கிய எச்.ராஜாவின் அட்மின்

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே தனி தமிழ்நாடு, திராவிட நாடு போன்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அண்ணா முதல்வர் ஆன பின்னர் அந்த கோரிக்கையை கைவிட்டுவிட்டார்.