அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய நயன்தாரா.. இன்ஸ்டா ஸ்டோரியில் ஹிண்ட்..!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக 5 திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதை மறைமுகமாக உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த படத்தின் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்சிக்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா, யாஷ் சகோதரியாக நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த படப்பிடிப்பில் தான் நயன்தாரா தற்போது கலந்து கொண்டிருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அந்த படத்தின் மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கேரக்டர் என்றும் படத்தின் திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

’டாக்சிக்’ தவிர நடிகை நயன்தாரா, மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் நடித்து வரும் ’டெஸ்ட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அதேபோல் அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் உருவாகி வரும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ நிவின் பாலி நடித்து வரும் மலையாள திரைப்படமான ’குட் ஸ்டுடென்ட்’ மற்றும் கவின் நடிப்பில் விஷ்ணு எடாவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.