'கதிஜா'  சமந்தாவுக்கு  'கண்மணி'  நயன்தாரா கொடுத்த அசத்தலான கிஃப்ட்!

நடிகை சமந்தாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொடுத்த கிப்ட் குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாக்கிய ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் கதிஜா என்ற கேரக்டரில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் ஏப்ரல் இறுதியில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நெருக்கம் ஆகி விட்ட நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தோழி சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா வாழ்த்து அட்டை மற்றும் காதணியை கிஃப்ட்டாக வழங்கி உள்ளார்.

இதுகுறித்த வாழ்த்து அட்டையில் சமந்தாவின் கேரக்டரான கதிஜாவை குறிப்பிட்டு 'டியர் கதிஜா, வித் லவ் கண்மணி’ என தனது வாழ்த்துக்களை நயன்தாரா தெரிவித்துள்ளார். இதற்கு சமந்தாவும் தனது நன்றியை நயன்தாராவை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'ஆர்.ஆர்.ஆர்' படக்குழுவினர் வெளியிட்ட 'அதிரா' ஃபர்ஸ்ட் ஸ்ட்ரைக் வீடியோ!

பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி இணையும் பிரைம்ஷோ ன்ட் நிறுவனத்தின்  “அதிரா”  படத்தின் முதல் காட்டுத்துணுக்கை, 'ஆர்.ஆர்.ஆர்' பட இயக்குனர் எஸ்.எஸ்.  ராஜமௌலி மற்றும் ஜுனியர் என்டிஆர், ராம் சரண்

'கே.ஜி.எஃப் 2' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான  'கே.ஜி.எஃப் 2'  திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம்

110 நாட்கள் இடைவிடாத ஓட்டம்… புதிய சாதனை படைத்த சிங்கப்பெண்!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த இளம் தடகள வீராங்கனை ஒருவர் இந்தியாவின் நாற்கர சாலையை ஒடியே கடந்து கின்னஸ்

'குக் வித் கோமாளி' அஸ்வினுக்காக சிம்பு செய்த உதவி: வீடியோ வைரல்!

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் 'என்ன சொல்லப்போகிறாய்' என்ற படத்தில் நடித்த அஸ்வினுக்கு சிம்பு செய்த உதவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 

ஆஸ்கர் நடிகர் வில் ஸ்மித்துக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரியுமா? வைரல் தகவல்!

சமீபத்தில் நடிந்து முடிந்த 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச்சென்றுள்ளார் அமெரிக்க