என்றென்றும் என் ஹீரோ இவர் ஒருவர் மட்டுமே: நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு..!
- IndiaGlitz, [Wednesday,April 03 2024]
நடிகை நயன்தாரா ’எப்போதுமே தனது ஹீரோ இவர்தான்’ என ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் அவருக்கு ரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நயன்தாராவுக்கு சில படங்கள் வரிசையாக தோல்வி அடைந்தாலும் கூட தற்போதும் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராக உள்ளார் என்பதும் இன்னும் அவருக்கு படங்கள் வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்து எமோஷனலான கேப்ஷன்களை பதிவு செய்யும் நயன்தாரா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் தான் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போது தனது தந்தை தன்னை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா, எப்போதும் என்னுடைய ஹீரோ நீங்க தான், ஐ லவ் யூ அச்சா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் நயன்தாரா குழந்தையாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை நயன்தாரா ஒரு பேட்டியில் தனது தந்தை குறித்து பேசியபோது ’ஏர்போர்ஸ் அதிகாரியான தனது தந்தை 12 ஆண்டுகளுக்கு மேலாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவரை மீண்டும் நான் பழையபடி மாற்ற முயற்சி செய்து வந்தும் என்னால் முடியவில்லை’ என்றும் கண்ணீர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.