9ஸ்கின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் தான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா 9ஸ்கின் என்ற சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் சேலத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசும் போது அவர் மேடையில் கண்கலங்கினார்
’ஒரு ஆணின் வெற்றிக்கு பின், பெண் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை அனைத்து பெண்கள் வெற்றிக்கு பின் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பார்.
என் கணவரை நான் என்றைக்கு சந்தித்தேனோ, அன்றிலிருந்து அவர் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். என்னை எப்போதுமே அவர் நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதே இல்லை. அது ஒரு மிகப்பெரிய விஷயம்.
அதுமட்டுமின்றி உங்களுக்கு இவ்வளவு தகுதி இருந்தும் நீங்கள் ஏன் இதை செய்யக்கூடாது என்று என்னை கேள்வி கேட்பார். 9ஸ்கின் நிறுவனம் உருவானதற்கு முழுக்க முழுக்க அவர்தான் காரணம். சமூக பொறுப்புடன் இப்படி ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று அவர்தான் எனக்கு ஐடியா கொடுத்தார்’ என கண் கலங்கியவாறு பேசினார்.
கடைசியாக சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் விக்னேஷ் சிவனை பார்த்து ’சாமி சரணம்’ என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com