9ஸ்கின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் தான் காரணமா?

  • IndiaGlitz, [Wednesday,January 10 2024]

நடிகை நயன்தாரா 9ஸ்கின் என்ற சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் சேலத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசும் போது அவர் மேடையில் கண்கலங்கினார்

’ஒரு ஆணின் வெற்றிக்கு பின், பெண் இருப்பார் என்று சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை அனைத்து பெண்கள் வெற்றிக்கு பின் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பார்.

என் கணவரை நான் என்றைக்கு சந்தித்தேனோ, அன்றிலிருந்து அவர் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். என்னை எப்போதுமே அவர் நீங்கள் ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதே இல்லை. அது ஒரு மிகப்பெரிய விஷயம்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு இவ்வளவு தகுதி இருந்தும் நீங்கள் ஏன் இதை செய்யக்கூடாது என்று என்னை கேள்வி கேட்பார். 9ஸ்கின் நிறுவனம் உருவானதற்கு முழுக்க முழுக்க அவர்தான் காரணம். சமூக பொறுப்புடன் இப்படி ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று அவர்தான் எனக்கு ஐடியா கொடுத்தார்’ என கண் கலங்கியவாறு பேசினார்.

கடைசியாக சபரிமலைக்கு மாலை போட்டு இருக்கும் விக்னேஷ் சிவனை பார்த்து ’சாமி சரணம்’ என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

More News

6 போட்டியாளர்களையும் தனி அறையில் வைத்து பூட்டிய பிக்பாஸ்.. கதவு திறந்ததா? இல்லையா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் திடீரென பிக் பாஸ் 6 போட்டியாளர்களையும் தனித்தனி அறைக்கு  செல்லுமாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் மகனுக்கு இந்த உதவியை செய்ய தயார்: ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்..!

விஜயகாந்த் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற  நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவருடைய மகனுக்கு உதவி செய்ய தயார் என்று வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் - எச்.வினோத் திரைப்படம் டிராப்பா? என்ன காரணம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்

துபாய் தொழிலதிபரை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் துபாய் தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ள நிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் நடிகையின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

இதே நிலைமை நமக்கும் ஏற்படலாம்... 'அயலான்' ரிலீஸ் எதிர்ப்பாளர்களுக்கு விநியோகிஸ்தர் எச்சரிக்கை..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' மற்றும் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்கள்