மூன்று குரங்குகள்.. தன்னை பற்றி அவதூறாக பேசியவர்கள் குறித்து நயன்தாரா.. வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை பற்றி அவதூறாக பேசிய மற்றும் பேசிக் கொண்டிருக்கும் மூன்று நபர்களை குரங்குகள் என்று நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினந்தோறும் நயன்தாரா குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தாலும், சிலர் மட்டும் நயன்தாராவை டார்கெட் செய்து, அவரைப் பற்றி அவதூறு செய்திகளை பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை பற்றி அவதூறாக பேசிய மூன்று பேரை "மூன்று குரங்குகள்" என்று குறிப்பிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த பேட்டியில் கூறியதாவது:
அந்த மூன்று பேரும் எப்போதும் என்னை பற்றி தான் பேசுகிறார்கள். அவர்களது 50 எபிசோடை எடுத்துக் கொண்டால், அதில் 45 எபிசோடு என்னைப் பற்றி தான் பேசுகிறார்கள். அவர்கள் என்னை பற்றி பேசும்போது நிறைய வியூஸ் வருகிறது. அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆக, அவர்களுடைய நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே.,
அவர்கள் வதந்திகளால் பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களை பார்க்கும்போது எனக்கு 'கெட்டதை பார்க்காதே, கெட்டதை பேசாதே, கெட்டதை கேட்காதே' என்று விளக்கம் அளிக்கும் மூன்று குரங்குகள் தான் ஞாபகத்தில் வருகிறது. ஆனால் இவர்கள் நேர்மாறாக உள்ளனர். கெட்டதை தான் பார்க்கிறார்கள், கெட்டதை தான் பேசுகிறார்கள், கெட்டதை தான் கேட்கிறார்கள். இதற்கு மேல் இவர்களை எப்படி குறிப்பிடுவது என எனக்கு தெரியவில்லை.
நாம் இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள கூடாது, கடந்து போக வேண்டும். அது மட்டும் இன்றி, என் அருகில் இருந்து என் அப்பா பார்த்தது போல என் பயணத்தை பற்றியும், எனது முழு வாழ்க்கையை பற்றியும் பேசுகிறார்கள். என்னை பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?” என்று நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாரா பேசிய அந்த 3 பேர் யார் என்று உங்களுக்கு புரிகிறதா? புரிந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout