லேடி சூப்பர் ஸ்டாருன்னு சொல்லாதீங்க.. சொன்னாலே திட்றாங்க.. நயன்தாரா பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

திரையுலகமே நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வரும் நிலையில் ’தயவு செய்து அந்த பெயரை வைத்து சொல்லாதீர்கள், அந்த பெயரை சொன்னாலே என்னை திட்டுகிறார்கள் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்

நடிகை நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக ’எப்போதுமே எனக்கு சினிமாவில் அப்பா என்றார் அது சத்யராஜ் தான் கரெக்டா இருக்கும்’ என்று தெரிவித்தார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தொகுப்பாளினி கேட்டபோது ’தயவு செய்து அதை மட்டும் சொல்லாதீங்க, சொன்னாலே திட்டுறாங்க’ என்று கூறினார்

மேலும் ‘என்னுடைய வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்துமே சினிமாவில் இருந்து கிடைத்தது. நான் பெற்ற பெயராக இருக்கட்டும், பணமாக இருக்கட்டும், மரியாதையாக இருக்கட்டும், எல்லாமே எனக்கு சினிமா கொடுத்தது தான்’ என்று பேட்டியின் முடிவில் நயன்தாரா தெரிவித்தார்

இந்த பேட்டியில் நயன்தாரா குறித்து ஜெய் கூறிய போது ’ராஜா ராணி’க்கு பிறகு அவருடன் நடித்தது எனக்கு சந்தோசமாக இருந்தது, இந்த படத்தை நான் மிஸ் பண்ணி இருந்தால் தாய்மார்கள் எனக்கு ஆதரவு தரும் வகையில் வேறு எந்த படத்தில் நான் பேசியிருப்பேன் என்று தெரியாது. நயன்தாராவிடம் நான் பேசினால் தான் ஆடியன்ஸ் எல்லார்கிட்டயும் போய் சேர்ந்தது’ என்று தெரிவித்தார்.