இதுவரை நான் யாரிடமும் சொல்லாத விஷயம்: நயன்தாரா 

  • IndiaGlitz, [Sunday,August 15 2021]

விஜய் டிவியில் நயன்தாரா அளித்த பேட்டியில் இதுவரை நீங்கள் ஒரு விஷயத்தை மீண்டும் முன்பு போல மாற்ற வேண்டும் என்று நினைத்தால் எதை மாற்றுவீர்க்ள் என்ற கேள்விக்கு மிகவும் நெகிழ்ச்சியான பதிலளித்தார் நயன்தாரா

தன்னுடைய தந்தை கடந்த 13 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரை ஒரு குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வோமோ, அதேபோல் தான் எனது அம்மா பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய விமானப்படையில் வேலை செய்த எனது தந்தையின் மூலம் தான் நான் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும், நேரத்திற்குள் வேலையை செய்ய வேண்டும், ஒரு விஷயத்தை மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன் என்றும் அவர்தான் எனக்கு குருவாகவும் இருந்தார் என்றும் தெரிவித்தார்

அப்படிப்பட்ட அப்பா கடந்த 13 ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையில் இருப்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், ஒருவேளை காலத்தை மாற்றும் சக்தி இருந்தால் என் அப்பாவை மீண்டும் நான் சிறுவயதில் பார்த்த கம்பீரமான அப்பாவாக பார்க்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருக்கிறது என்று இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விஷயத்தை அவர் கூறினார். மேலும் இந்த விஷயத்தை அவர் கூறும் போது அவரையும் அறியாமல் அவர் அழுது விட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.