நயன்தாரா படத்தின் டைட்டிலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா நடித்த முதல் பேய்ப்படமான 'மாயா' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்கவுள்ளதாக வந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை தாஸ் ராமசாமி என்பவர் இயக்கவுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படமான 'டிக் டிக் டிக்' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது இந்த செய்தி மறுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் 'டிக் டிக் டிக்' என்பது இந்த படத்தின் தலைப்பு என வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
மேலும் 'டிக் டிக் டிக்' என்ற டைட்டிலை வைத்தால் தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. படக்குழுவினர் இந்த படத்தின் கதைக்கு தகுந்த டைட்டிலை விரைவில் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments