கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமாவில் சாத்தியமில்லை: நயன்தாரா
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுமுக நடிகைகள் மற்றும் வளரும் நடிகைகள் கவர்ச்சி காட்டி தங்களது மார்க்கெட்டை அதிகரிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரிய நடிகைகளும் தொடர்ந்து கவர்ச்சியாகவே நடித்து வருகின்றனர். இதுகுறித்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியபோது, ‘சினிமாவில் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொல்ல முடியாது. சூழ்நிலையைப் பொறுத்து, கதையின் தன்மையை பொறுத்து, சில சந்தர்ப்பங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமா உலகில் தவிர்க்க முடியாத நிர்பந்தம் என்று கூறினார்.
மேலும் எனக்கு கிடைக்கும் வெற்றியை நான் ஒரு போதும் என் தலையில் ஏற்றி கொண்டது இல்லை என்று கூறிய நயன்தாரா, அதே நேரத்தில் நான் நடித்த ஒவ்வொரு படத்தின் ரிலீசின்போதும் அந்த படம் மக்களிடம் வரவேற்பை பெறுமா? அந்த படத்தில் நடிக்க நான் எடுத்த முடிவு சரியா? என்ற பயமும் கேள்வியும் எனக்குள் இருக்கும்’ என்று நயன்தாரா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
என்னை பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்துள்ளனர். அவர்களுக்கு நான் பதில் சொல்வதில்லை, என் வெற்றி தான் பதிலடி. இந்த உலகம் நாம் எப்படி இருந்தாலும் பேசும். அதனால் என்னைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
நான் பேசுவதை திரித்து ஒருசில பத்திரிகைகள் செய்தி வெளியிடுவதால் நான் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பதை தவிர்த்து வருவதாகவும் நயன்தாரா பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments