'மாயா'வை அடுத்து மீண்டும் பேய்ப்படத்தில் நயன்தாரா?

  • IndiaGlitz, [Monday,November 30 2015]

தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான் என ஹாட்ரிக் சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்நிலையில் நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' மற்றும் 'திருநாள்' ஆகிய படங்களும் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும் விக்ரம் நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் 'மாயா' படம் போன்று தன்னுடைய கேரக்டரை சுற்றி படம் முழுவதும் வரும் ஒரு கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மாயா' போன்ற கேரக்டரா? அல்லது மாயா போன்ற பேய்ப்படமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தை இயக்குனர் சற்குணம் அவர்களின் உதவியாளர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி மலையாளத்தில் மம்முட்டியுடனும், தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு பக்தி படத்திலும் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.