நயன்தாரா இதுவரை நடிக்காத வேடம்: புதிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,August 09 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வேடங்களிலும் நடித்துவிட்டார். சாதாரண கிராமத்து பெண் முதல் சிபிஐ அதிகாரி, கலெக்டர் வரை நடித்துவிட்ட நயன்தாரா, நடிக்காத வேடங்கள் மிகவும் குறைவு எனலாம்.

அந்த வகையில் நயன்தாரா இதுவரை நடிக்காத கேரக்டரான பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் 'கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்' கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ள படத்தில் தான் அவருக்கு இந்த கேரக்டர் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்காக மிகப்பெரிய பேய் பங்களா செட் ஒன்று தயாராகி வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் நிச்சயம் நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ: கலைஞர் குறித்து விஜயகாந்த் கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் நேற்று கதறியழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார்

கருணாநிதி மறைவு எதிரொலி: ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகை ஹன்சிகாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று அவருடைய பிறந்த நாளுக்கு ரசிகர்களும், சக நடிகர், நடிகைகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா

திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது

கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

கட்டுக்கடங்காத கூட்டம்: போலீஸ் தடியடியால் இரண்டு பேர் பலி

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நோக்கி ஊர்வலமாக செல்லவிருப்பதால்