close
Choose your channels

நயன்தாராவால் சிபாரிசு செய்யப்பட்ட பிரபல காமெடி நடிகர்

Saturday, June 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமீபத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது 'மா', 'லட்சுமி' குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ள நயன்தாரா, இந்த படத்தில் இடம்பெறும் ஒரு காமெடி கேரக்டருக்கு யோகிபாபுவை படக்குழுவினர்களிடம் சிபாரிசு செய்தாராம். 'கோலமாவு கோகிலா' படத்தில் யோகிபாபுவுடன் நடிக்கும்போது அவரது நடிப்பு திறமையை நேரில் பார்த்து வியந்த நயன்தாரா, இந்த படத்தில் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.

சென்னை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment