கோலமாவு கோகிலா'வில் நயன்தாராவின் கேரக்டர் இதுதான்

  • IndiaGlitz, [Thursday,March 15 2018]

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', நரசிம்ம ரெட்டி, கோலமாவு கோகிலா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அஜித்தின் விசுவாசம்',  கமல்ஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படம் ஆகிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் மம்முட்டி ஜோடியாக ஒரு தெலுங்கு படத்திலும் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய 'கோலமாவு கோகிலா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா நடித்து வரும் கேர்கடர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா லோயர் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளாராம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களில் நயன்தாரா, சாதாரண பாவாடை சட்டை காஸ்ட்யூமில் இருந்ததே இந்த தகவலை உறுதி செய்கிறது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

More News

சீயான் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இன்னொரு நாயகன்

விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் சீயான் குடும்பத்தில் இருந்து இன்னொரு நாயகன் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்

5 தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் கைது! திரையுலகினர் மகிழ்ச்சி

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள் 5 பேர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கமல் ஒரு நாகரீகமான அரசியலை நடத்த வேண்டும். தமிழிசை செளந்திரராஜன்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் நேற்று கமல் கட்சியில் சேர விண்ணப்பம் செய்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் ஆதாரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர்.

ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு திடீர் சிக்கல்:

பெற்றோர்களுக்கு தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்யும் காதலர்களுக்கு கிடுக்கிப்பிடியாக இனிமேல் ரிஜிஸ்தர் திருமணம் செய்து கொள்பவர்கள் பெற்றோர் அனுமதியை பெற வேண்டும்

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் ஒருசிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்