நயன்தாராவின் 55வது படத்தின் டைட்டில் அறிவிப்பு.

  • IndiaGlitz, [Friday,November 18 2016]

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலெக்டராக நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக், இன்று அவருடைய பிறந்த நாளில், பிறந்த நாள் பரிசாக அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று அதிகாலை சரியாக 12.00 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது.
'அறம்' என்பதுதான் நயன்தாராவின் 55வது படத்தின் டைட்டில். தண்ணீர் பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சமூக பார்வையுள்ள இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத கலெக்டர் பாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளார். KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.