இஷா அம்பானியுடன் கைகோர்த்த நயன்தாரா? வேற லெவலில் பிசினஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசு இஷா அம்பானி உடன் கைகோர்த்து இருப்பதாகவும், அதனால் நயன்தாராவின் பிசினஸ் வேறு லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார் என்பதும், குறிப்பாக டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் 9Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் ஒப்பந்தமாக செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் நயன்தாராவின் அழகு சாதன பொருட்கள் இனி இஷா அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் ரீடெய்ல் கடைகளில் கிடைக்கும். மேலும் 9Skin நிறுவனம் “Skinderella” Hydrogel Mask என்கிற பொருளை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் இதனை இஷா அம்பானியின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும்.
நடிகை நயன்தாரா ‘ஜவான்’ படத்தில் நடிக்கும்போது இஷா அம்பானியுடன் நட்பு ஏற்பட்டதாகவும், அந்த நட்பு தற்போது தொழில் ரீதியாக வளர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com