close
Choose your channels

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் இருந்து நயன்தாரா நீக்கமா? என்ன காரணம்?

Saturday, October 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் அடுத்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக செய்தி வெளியானது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் இந்த படம் ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட படமாக எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் ராகவா லாரன்ஸ், நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளதாகவும் எனவே ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேறு நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படப்பிடிப்பு தொடங்கும் தேதி மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், பணி செய்யும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment