நயன்தாராவுடன் இணைந்த மணிரத்னம் நாயகி

  • IndiaGlitz, [Saturday,December 12 2015]

'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் இன்னொரு நாயகி கேரக்டருக்கு கடந்த சில வாரங்களாக முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கேரக்டருக்கு நித்யாமேனன், காஜல் அகர்வால், பிந்துமாதவி ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது நித்யாமேனன் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நித்யாமேனன் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' என்ற வெற்றி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்க நித்யாமேனன் ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரமே தொடங்க திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அனேகமாக இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' அல்லது 'மாரீசன்' என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

சென்னைக்கு ஏதாவதுன்னா உடனே ஓடி வந்துடுவோம். பாகுபாலி ராணா

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதம் அடைந்தது....

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு 'மனக்களிம்பு' போடும் பார்த்திபன்

திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக நடிகர், இயக்குனர் என வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்.பார்த்திபன் மற்ற நடிகர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமானவர்....

அஜீத்-விஜய்க்கு கிடைக்காத பெருமையை பெற்ற தனுஷ்

2015ஆம் ஆண்டின் இந்தியாவின் டாப் 100 திரை நட்சத்திரங்கள் குறித்த பட்டியல் ஒன்றை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது...

விஜய் நாயகியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகைகளில் ஒருவரான நந்திதா ஸ்வேதா...

ஐந்து இளம் ஹீரோக்களுடன் நடிக்கும் அனுஷ்கா?

'பாகுபலி', 'ருத்ரம்மாதேவி', மற்றும் இஞ்சி இடுப்பழகி' படங்களை அடுத்து அனுஷ்கா தற்போது 'பாகுபலி 2' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்...