லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் நயன்தாரா.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’லியோ’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’தலைவர் 171’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் படம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ’ஆடை’ இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்றும் தற்போது ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ரத்னகுமார் கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிப்பது மட்டுமின்றி கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சிலர் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.