நயன்தாராவின் அடுத்த படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு குறித்த வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவுடன் நயன்தாரா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. மேலும் நயன்தாரா தற்போது ’கோல்ட்’, ’லயன்’, ’காட்ஃபாதர்’ மற்றும் ’கனெக்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று O2. ஆக்சிஜன் என்ற அர்த்தம் கொண்ட இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வீடியோவை ஹாட் ஸ்டார் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் நேரடியாக ஹாஸ்டாரில் வெளியானதை அடுத்து நயன்தாராவின் இந்த படமும் நேரடியாக ஹாஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Presenting the Title Reveal of O2 Tamil Movie.
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) May 6, 2022
Coming soon on #DisneyplusHotstar#O2onHotstar #Nayanthara @DreamWarriorpic @prabhu_sr #Ritvick #GSViknesh #Thamizh #VishalChandrasekar pic.twitter.com/ZxrXPt1pxe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments