நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 09 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் இன்று அறிவிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

அதன்படி சற்றுமுன் நயன்தாராவின் அடுத்த பட டைட்டில் 'ஐரா' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் வெளீயீடு என்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படத்தையும் இயக்கிய இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கின்றார். இவர்தான் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.