பிறந்தநாளில் ரசிகர்களுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் போது, அவருடைய புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஏற்கனவே ’தி டெஸ்ட்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று, நயன்தாராவின் பிறந்தநாளில், இப்படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘ராக்காயி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கையில் ஆயுதங்களுடன், கிராமத்து மக்களால் சூழப்பட்ட நயன்தாரா, ஆவேசமாக உள்ளார்.
இந்த படத்தை செந்தில் நல்லசாமி இயக்க இருப்பதாகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவில், பிரவீன் அந்தோணி படத்தொப்பில் உருவாகும் இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது.
The WAR is ON! 🔥
— Drumsticks Productions (@DrumsticksProd) November 18, 2024
Presenting the explosive title teaser of Lady Superstar #Nayanthara’s #Rakkayie! Wishing her a spectacular birthday!
▶️ https://t.co/7qadejmLz7#Nayanthara @DrumsticksProd @MovieVerseIndia @SenthilNallaDir #GovindVasantha @thaikudambridge @Its_Gowtham_R pic.twitter.com/K1Oiw5OEee
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com