யூடியூப் திரை விமர்சகர் படத்தில் நயன்தாரா.. இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
யூடியூபில் திரை விமர்சனம் செய்பவர் மற்றும் திரை உலக நட்சத்திரங்களை பேட்டி எடுக்கும் ஒருவரின் கதையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
யூடியூபை திறந்தால் ஏகப்பட்ட திரை விமர்சகர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒரு சிலர் ஒரு படத்தின் நிறை குறைகளை சரியாக கூறி வருகின்றனர். அந்த வகையில் யூடியூபில் திரைவிமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் பரத்வாஜ் ரங்கன். இவர் பிரபல பத்திரிகையில் பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரத்வாஜ் ரங்கன் திரைப்பட விமர்சனங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். தற்போது இவர் எழுதிய ஒரு கதையில் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
நயன்தாரா நடிப்பில் உருவான ’ஐரா’ என்ற படத்தை இயக்கிய சர்ஜூன் என்பவர் தான் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
நயன்தாரா நடிப்பில் சர்ஜுன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ’ஐரா’ என்ற திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தில் பவானி, யமுனா என நயன்தாரா இரண்டு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் இந்த படத்திலும் அவருக்கு வித்தியாசமான கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are happy to announce our next exciting film written by @baradwajrangan and directed by #SarjunKM. Cast and crew details soon.@lakku76 @venkatavmedia pic.twitter.com/4sso4mQvOq
— Prince Pictures (@Prince_Pictures) July 15, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments