close
Choose your channels

நயன்தாராவின் அடுத்த படம் நேரடி ஓடிடி ரிலீஸா? என்ன காரணம்?

Thursday, October 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பல திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், சமீபகாலமாக அனைத்து படங்களும் முதலில் திரையரங்கில் வெளியாகி, அதன் பிறகு ஒரு மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், நடிகை நயன்தாரா நடித்த ’டெஸ்ட்’ என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு சக்தி ஸ்ரீகோபாலன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், நேரடியாக ஓடிடி தளத்தில் ’டெஸ்ட்’ படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ ‘ஓ2’ உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், ’டெஸ்ட்’ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment