close
Choose your channels

நாளை நயன்தாரா அடுத்த படத்தின் பூஜை.. ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் யார்?

Thursday, July 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கடந்த 20 ஆண்டுக்கு மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஏற்கனவே மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நயன்தாரா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியான நிலையில் நாளை இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் லலித் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை விஜய்யின் சில படங்களுக்கு பாடல்கள் எழுதிய விஷ்ணு எடாவன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை, ஒரு இளைஞர் காதலிக்கும் நிலையில் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் காமெடியான கதை அம்சம் என்று கூறப்படுகிறது. இதனால் தான் 33 வயது கவினுக்கு, 39 வயது நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment