இன்று நடந்த நயன்தாராவின் அடுத்த படத்தின் பூஜை

  • IndiaGlitz, [Saturday,July 14 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்த 'கோலமாவு கோகிலா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையடுத்து அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான 'இமைக்கா நொடிகள்' திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதுபோக அவர் தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம்', சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி' மற்றும் 'கொலையுதிர்க்காலம், குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல மலையாள நடிகர் நிவின்பால் ஹீரோவாக நடிக்கும் 'லவ் ஆக்சன் டிராமா' என்ற படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தயன்ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்த படத்தை அஜூவர்கீஸ் தயாரிக்கின்றார். கொச்சியில் இன்று நடந்த இந்த படத்தின் பூஜையை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மம்முட்டியுடன் 'புதிய நியமம்' என்ற படத்தில் நடித்த நயன்தாரா, அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கும் படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஸ்ரீரெட்டியின் அடுத்த ஃபேஸ்புக் பதிவில் விஷால்

கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலகில் வீசிவந்த நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புயல் தற்போது கோலிவுட்டை நோக்கி மையம் கொண்டுள்ளது.

நான் போலி பகுத்தறிவாளனா? தமிழிசைக்கு கமல் பதில்

பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்றும், அமாவாசை தினத்தில் கட்சி ஆரம்பித்து, அமாவாசை தினத்தில் கொடியேற்றுகிறார்

கமல், விஜய் பட பாணியில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதி படம்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'சீதக்காதி' திரைப்படத்தின் டீசர் வரும் 15ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இடையே திரையிடப்படவுள்ளது

கீர்த்திசுரேஷூக்கு விஷால் தரும் பிறந்த நாள் பரிசு

விஷால் நடிப்பில் உருவான 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படமான 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி

உலக சாதனை படைத்த அஜித்தின் முயற்சி

தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் சுமார் ஆறு மணி நேரம் விண்ணில் பறந்து சாதனை செய்துள்ளது.