முடிவுக்கு வருகிறது நயன்தாராவின் அடுத்த படம்.. ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஆண்டு ’ஜவான்’ ’இறைவன்’ ’அன்னபூரணி’ ஆகிய மூன்று படங்களில் நடித்த நிலையில் தற்போது அவர் ’தி டெஸ்ட்’ மற்றும் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள படம் உள்பட இன்னும் இரண்டு படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் 15 முதல் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாகவும் அதன் பிறகு இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த ஆண்டு வெளியாகும் நயன்தாராவின் முதல் படமாக ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ இருக்கும் என்று கூறப்படுகிறது.

நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷான், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை டியூட் விக்கி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் சீன் ரோல்டான் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

More News

நடித்த ஒரே படத்தின் இரண்டாம் பாகமா? லெஜண்ட் சரவணன் வேற லெவல் திட்டம்..!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் 'லெஜண்ட்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில் அவரது அடுத்த படமாக இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குறைமாத குழந்தைகளின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு.

குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மீது இன்னும் அதிகமான கவனம் தேவை.அந்த குழந்தை இயல்பான நிலைக்கு வரும் வரை அதனை மேலும் அதிக பராமரிப்போடு வைத்து கொள்வது சிறந்தது...

வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கொடுத்த வாக்குறுதி.. வெற்றி நிலவரம் எப்படி இருக்கிறது?

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரணாம்பட்டு, பத்தலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்

'மெளன ராகம்' சீரியல் ஜோடியின் 'எங்கேஜ்மெண்ட்'.. அசத்தல் புகைப்படங்கள்.. புரியாமல் குவியும் வாழ்த்துக்கள்..!

'மெளன ராகம்' சீரியலில் நடித்த ஜோடி தற்போது 'எங்கேஜ்மெண்ட்' என்ற புதிய சீரியலில் நடிக்கவுள்ள  நிலையில் இவர்கள் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து இருவரும்

ரஜினியின் 2 படங்களை தயாரித்த தயாரிப்பாளர் மறைவு.. இரங்கல் தெரிவித்த ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இரண்டு படங்கள் உட்பட சில தமிழ் படங்களையும் ஏராளமான கன்னட படங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் காலமான நிலையில் அவருக்கு