'அந்த இரண்டு படங்கள் போல் எதிர்பார்க்க வேண்டாம்': நயன்தாரா அடுத்த பட இயக்குனரின் பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது முந்தைய இரண்டு படங்களை போல் இந்த படத்தை எதிர்பார்க்க வேண்டாம் என நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்கிய இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கடந்த 2013ஆம் ஆண்டு ’நேரம்’ என்ற படத்தை இயக்கினார். அதன்பின் 2015ஆம் ஆண்டு ’பிரேமம்’ என்ற படத்தை இயக்கினார். இந்த நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள திரைப்படம் ‘கோல்ட்’. பிரித்விராஜ், நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது டுவிட்டரில் ’நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய எனது முந்தைய இரண்டு படங்களை போல் ’கோல்ட்’ படத்தை எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் ’கோல்ட்’ திரைப்படம் ஒரு தனித்துவமான படம். இந்த படத்திற்காக 40க்கும் மேற்பட்ட கேரக்டர்களை உருவாக்கி உள்ளேன். இந்த படம் உங்கள் அனைவரையும் நிச்சயம் மகிழ்விக்கும் என்றதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ், நயன்தாரா, அஜ்மல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைத்துள்ளார். ’கோல்ட்’ படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Please don't expect a film from me like NERAM or PREMAM ??. GOLD might be similar to NERAM, but it is Unique in its own way. There are more than 40 Characters newly written for GOLD. We all will try to entertain you. That our team will guarantee.??
— Alphonse Puthren (@puthrenalphonse) June 7, 2022
- Alphonse Puthren
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout