நயன்தாராவின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபலமா? செம்ம வெயிட்டான ரோல்..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது ’அன்னபூரணி’ ’தி டெஸ்ட்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

‘கனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு ’நெஞ்சுக்கு நீதி’ மற்றும் சமீபத்தில் வெளியான’ லேபிள்’ வெப் தொடரை இயக்கிய அருண்ராஜா காமராஜ் நயன்தாராவிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இதே நிறுவனத்தின் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கார்த்தி தற்போது பிஸியாக இருப்பதால் அதற்கு முன்னதாக நயன்தாரா படத்தை இயக்க அருண்ராஜா காமராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.