நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி', மற்றும் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம், 'கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை தொடர்ந்து பல வருடங்களாக தக்க வைத்து கொண்டிருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 3வது படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிறுவனம் இதற்கு முன்னர் நயன்தாரா நடித்த 'அறம்' மற்றும் பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி' ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் பூஜையூடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் நயன்தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் குறித்து யாரும் எதிர்பார்க்காத தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

கட்சி தொடங்கலாம், ஆனால் ஆட்சிக்கு வரமுடியாது: கமல், ரஜினி குறித்து காங்கிரஸ் தலைவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஒரு ஆளுமை இல்லாத தலைவர் இருப்பதாகவும்,

அமித்ஜிக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் பிறந்த நாளில் அஜித் செய்ய போவது என்ன தெரியுமா?

தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் பத்தே நாட்களே உள்ளது. விஜய்யின் இந்த ஆண்டு பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரருக்கு நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம்

கொல்கத்தா அணியின் சிறந்த பேட்ஸ்மேனின் ஒருவரான  நிதீஷ் ராணாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ-க்குக் ஆப்பு வைத்த மத்திய அரசு

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தி வந்த நிலையில் இனிமேல் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.