நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி', மற்றும் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம், 'கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய திரையுலகின் நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை தொடர்ந்து பல வருடங்களாக தக்க வைத்து கொண்டிருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 3வது படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிறுவனம் இதற்கு முன்னர் நயன்தாரா நடித்த 'அறம்' மற்றும் பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி' ஆகிய படங்களை தயாரித்துள்ளது. இந்த படத்தை சர்ஜூன் என்பவர் இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் பூஜையூடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் நயன்தாரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் குறித்து யாரும் எதிர்பார்க்காத தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#Nayan63 - We're pumped up to start shooting our #ProductionNo3 with #Nayanthara & Director @sarjun34
— KJR Studios (@kjr_studios) June 12, 2018
On floors from today! We guarantee you some stunning surprises in this film.. Stay tuned! pic.twitter.com/t19IOhkSXk
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com