நயன்தாராவின் அடுத்த பட கேரக்டர் 'சத்யபிரியா ஜெய்தேவ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 08 2022]

நயன்தாராவின் அடுத்த படத்தின் கேரக்டர் சத்யபிரியா ஜெயதேவ் என்று அறிவித்துள்ள படக்குழுவினர் அந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ’காட்பாதர்’. ‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா இந்த படத்தில் சத்யபிரியா ஜெயதேவ் என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

அதர்வா - பிஎஸ் மித்ரன் இணைந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி!

அதர்வா நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனத்தில் உருவாகிய படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் பூஜையுடன்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டிருப்பது

கார்கில் நினைவிடத்தில் அஜித் என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் தற்போது வட இந்தியாவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அவர் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பெங்களூரு கனமழை, வெள்ளம் எதிரொலி: ஒரு இரவுக்கு லாட்ஜில் இத்தனை ஆயிரம் வாடகையா?

பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்ததை அடுத்து சாதாரணமானவர்களின் வீடு முதல் கோடீஸ்வரர்களின் வீடு வரை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள