நயன்தாராவின் அடுத்த பட கேரக்டர் 'சத்யபிரியா ஜெய்தேவ்': ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,September 08 2022]

நயன்தாராவின் அடுத்த படத்தின் கேரக்டர் சத்யபிரியா ஜெயதேவ் என்று அறிவித்துள்ள படக்குழுவினர் அந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் ’காட்பாதர்’. ‘தனி ஒருவன்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா இந்த படத்தில் சத்யபிரியா ஜெயதேவ் என்ற கேரக்டரில் நடித்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.