ஜாலியாக ஒரு போட்டிங்.. பிரபல நடிகருடன் புத்தாண்டை கொண்டாடும் நயன்தாரா..!
- IndiaGlitz, [Tuesday,December 31 2024]
பிரபல நடிகர் மற்றும் அவருடைய மனைவியுடன் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் போட்டிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட வெளிநாட்டுக்கு செல்வார் என்பதும், அந்த வகையில் இந்த ஆண்டு அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்று புத்தாண்டை கொண்டாடி இருப்பதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி மட்டுமின்றி, மாதவன் மற்றும் அவருடைய மனைவியும் துபாயில் புத்தாண்டை கொண்டாட வந்திருக்கும் நிலையில், இந்த இரண்டு ஜோடிகளும் ஒன்றாக போட்டிங் செய்யும் புகைப்படத்தை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
நயன்தாரா மற்றும் மாதவன் ஆகிய இருவரும் 'டெஸ்ட்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில், தற்போது இரு குடும்பத்தினரும் புத்தாண்டை கொண்டாடி வரும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
📸 @ActorMadhavan pic.twitter.com/97oFfYdpeI
— Nayanthara✨ (@NayantharaU) December 31, 2024