பிறந்தநாளில் வெளியான நயன்தாராவின் புதிய பட அறிவிப்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நயன்தாராவின் புதிய படத்தை அவருடைய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது

அனுபம்கெர், நயன்தாரா மற்றும் சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘கனெக்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என தெரிகிறது

நயன்தாரா ஏற்கனவே ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கோல்டு’, ’காட்ஃபாதர்’ ‘லயன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் இன்றைய பிறந்தநாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது