ஃபோர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் நயன்தாரா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவர் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'அறம்', 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் நல்ல வசூலை கொடுத்தன.
அதேபோல் நயன்தாரா சம்பளமும் ஒருசில முன்னணி நடிகர்களின் சம்பளத்தைவிட அதிகம் ஆகும். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் இதழ் அதிக வருவாய் பெற்ற இந்திய பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018ஆம் ஆண்டின் பட்டியல் தற்போது வந்துள்ளது. இந்த பட்டியலில் நயன்தாரா 69வது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு இந்த ஆண்டு 15.17 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சல்மான்கான், விராத் கோஹ்லி, அக்சயகுமார், தீபிகா படுகோன் மற்றும் தோனி ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 11வது இடத்திலும், ரஜினிகாந்த் 14வது இடத்திலும், விஜய் 26வது இடத்திலும், விக்ரம் 29வது இடத்திலும், சூர்யா 34வது இடத்திலும், தனுஷ் 53வது இடத்திலும், கமல்ஹாசன் 71வது இடத்திலும், உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com