நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்..

  • IndiaGlitz, [Tuesday,July 05 2016]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது 'டோரா' (Dora) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிக்கும் திகில் படமான இந்த படத்தை அவருடைய உதவியாளர் தாஸ் இயக்கி வருகிறார். இரட்டையர்களான விவேக்-மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
'மாயா' என்ற திகில் வெற்றி படத்தை அடுத்து மீண்டும் நயன்தாரா நடித்து வரும் திகில் படம் இது என்பதாலும், நயன்தாராவின் சமீபத்திய படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்ததாலும், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடிக்கின்றனர்.