லண்டன் ஹீரோவுக்கு அக்காவான நயன்தாரா.. 150 நாட்கள் தாக்கு பிடிப்பாரா?

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

லண்டன் ஹீரோ கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு அக்கா கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ படங்களில் நடித்த யாஷ் நடிக்கும் ’டாக்சிக்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை மொத்தம் 200 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 150 நாட்கள் மட்டும் லண்டனில் படமாக்கப்பட உள்ளதாம்.

லண்டன் ஹீரோ கேரக்டரில் நடிக்கும் யாஷ் சகோதரிகளாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ’காலா’ ’வலிமை’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா, ஹூமா குரேஷி ஆகிய இருவரது காட்சிகள் பல நாட்கள் லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் இந்த படம் ’கேஜிஎப்’ அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ‘டாக்சிக்’ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது

More News

கமல் பாட்டையெல்லாம் யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டாங்க.. இயக்குனர் சொன்னதை மறுத்த ஏவிஎம்..!

கமல் பாட்டையெல்லாம் யாரும் 4 நிமிடம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள், அதனால் தான் அந்த பாட்டை ஒரு நிமிடமாக குறைத்தேன் என்றும் இயக்குனர் கூறியதை

வசூலை குவிக்கும் விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள

டூ பீஸ் பிகினி உடையில் 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகை.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தமிழும் சரஸ்வதியும்' என்ற சீரியலில் நடிக்கும் நடிகை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை

'பாகுபலி'க்கு சவால் விடுக்கும் மல்டி ஸ்டார் படத்தின் டீசர்.. ஒரே படத்தில் மோகன்லால், சரத்குமார், அக்சய்குமார்..!

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் உருவான 'கண்ணப்பா' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் 'பாகுபலி'

இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்காக தன் குரலின் மூலம் நிதி திரட்டிய பாடகி பாலக் முச்சல்.

வெறும் 32 வயதே ஆகும் பாடகி பாலக் முச்சல் இதுவரை 3000 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு காரணமாக இருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் பலர் இவரை நெகிழ்ச்சியாக பாராட்டி வருகின்றனர்...