லண்டன் ஹீரோவுக்கு அக்காவான நயன்தாரா.. 150 நாட்கள் தாக்கு பிடிப்பாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லண்டன் ஹீரோ கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு அக்கா கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
’கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎப் 2’ படங்களில் நடித்த யாஷ் நடிக்கும் ’டாக்சிக்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை மொத்தம் 200 நாட்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 150 நாட்கள் மட்டும் லண்டனில் படமாக்கப்பட உள்ளதாம்.
லண்டன் ஹீரோ கேரக்டரில் நடிக்கும் யாஷ் சகோதரிகளாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ’காலா’ ’வலிமை’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா, ஹூமா குரேஷி ஆகிய இருவரது காட்சிகள் பல நாட்கள் லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் இந்த படம் ’கேஜிஎப்’ அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ‘டாக்சிக்’ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், இன்னொரு பக்கம் தொழில்நுட்ப பணிகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments