தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நயன்தாரா நடித்த படத்தின் இயக்குனர் தன்னிடம் பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நயன்தாரா நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று ’மாயா’ என்பதும் இந்த படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை அடுத்து மீண்டும் நயன்தாரா நடித்து வரும் ’கனெக்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் நயன்தாராவுடன் அனுபம் கேர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி நடித்த ‘கேம் ஓவர்’ என்ற திரைப்படத்தில் அவரிடம் பணிபுரிந்தவர் காவியா என்பவர். டாக்டரான இவர் எழுதுவதில் விருப்பம் கொண்டவர் என்பதும் அதனால் அவர் அஸ்வின் இயக்கிய ‘கேம் ஓவர்’ ப்டத்தில் திரைக்கதை எழுதும் பணியில் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஸ்வின், காவ்யா இருவரும் நட்பாகி அதன்பின் காதலாகி தற்போது இந்த காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. திரையுலக பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது திருமணம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மணப்பெண் காவியா தற்போது அஸ்வின் இயக்கிவரும் ’கனெக்ட்’ திரைப்படத்திலும் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
It started with pen and paper. It has ended in poetry ♥️ Kaavya Ramkumar, thank you for riding out the storm with me every single time. Doing this with you, especially during the third wave, was an adventure by itself. pic.twitter.com/WWlGs3lrm7
— Ashwin Saravanan (@Ashwin_saravana) January 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com