என்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை.. நயன்தாரா பட இயக்குனரின் ஆவேச பதிவு!
- IndiaGlitz, [Monday,January 23 2023]
நயன்தாரா நடித்த திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனரை ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ள இயக்குனர் ’என்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘நேரம்’ ’பிரேமம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான ’கோல்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த படத்தை பார்த்த பலர் ஏமாற்றம் அடைந்தனர் என்பதும் அதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கோல்டு’ திரைப்படத்தை விமர்சனம் செய்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக பதிவு செய்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் அல்போன்ஸ் மித்திரன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். எனது ’கோல்டு’ படத்தை பற்றி தவறாக பேசுவது உங்களுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம், ஆனால் எனக்கு அது நல்லதல்ல. உங்களுடைய நிம்மதிக்காக என்னை விமர்சனம் செய்வதை நான் அனுமதிக்க மாட்டேன். என் முகத்தை இணையத்தில் காட்டாமல் போராட்டம் நடத்தப்போகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை, நீங்கள் என்னை கிண்டல் செய்யவோ அல்லது பொது இடத்தில் துஷ்பராகம் செய்யவும் உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்கு பிடித்தால் எனது படங்களை பாருங்கள், உங்களை கோபங்களை வெளிப்படுத்துவதற்காக என்னுடைய சமூக வலைதள பக்கத்திற்கு வர வேண்டாம், நீங்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து கொண்டிருந்தால் நான் இணையத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும் நான் முதலில் எனக்கு உண்மையாக இருப்பேன், அதன் பிறகு என் மனைவி, குழந்தைகள், என்னை சுற்றி இருப்பவர்களுக்கு உண்மையாக இருப்பேன். நான் கீழே விழும்போது அவர்கள் தான் என் அருகில் நின்று என்னை தூக்கி விடுவார்கள், நான் கீழே விழுந்த போது உங்கள் முகத்தில் தோன்றிய சிரிப்பை என்னால் மறக்க முடியாது, யாரும் வேண்டுமென்று கீழே விழுவது இல்லை, அது இயற்கையாக நடக்கும், ஆனால் அதே இயற்கை என்னை மீண்டும் தூக்கி விடும்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.