close
Choose your channels

மடியில் தூங்கும் குழந்தையை அன்புடன் கால் அமுக்கி விடும் நயன்.. வைரல் வீடியோ..!

Thursday, October 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது மடியில் தூங்கும் குழந்தையின் கால் அமுக்கி விடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது.

உயிர் மற்றும் உலகம் என்று அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்ட நிலையில் அவ்வப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்வார். குறிப்பாக சமீபத்தில் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடினார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகை நயன்தாராவின் மடியில் அவரது குழந்தை தூங்கி கொண்டிருக்கும் நிலையில் அந்த குழந்தையின் காலை அமுக்கி விடும் தாய் அன்பு மிக்க காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment