'கோட்' படத்தை மிஸ் செய்த நயன்தாரா.. எந்த கேரக்டர் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'கோட்’. இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக இதுவரை வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் தந்தை விஜய் ஜோடியாக சினேகா நடித்திருக்கும் நிலையில் இந்த கேரக்டரில் முதலில் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் நயன்தாராவால் நடிக்க முடியாத நிலையில், அதன் பின்னர் சினேகா அந்த கேரக்டரில் நடித்தார் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 'கோட்’ வெளியான பின்னர் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்த நயன்தாரா, வெங்கட்பிரபுவிடம், இந்த கேரக்டருக்கு சினேகா மிகவும் பொருத்தமாக இருந்தார் என்றும் அவர் தான் இந்த கேரக்டருக்கு சரியானவர் என்று கூறியதாகவும் வெங்கட் பிரபு அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்