போயஸ் தோட்டத்தில் புது வீடு.. நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

நடிகை நயன்தாரா போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் இருக்கும் போயஸ் கார்டனில் சொந்த வீடு வாங்கியதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த வீட்டின் பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது புத்தம் புது வீட்டின் முன் எடுத்த அசத்தல் புகைப்படங்களை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

இந்தியா உலகக் கோப்பை வாங்கியது போன்ற மகிழ்ச்சி இந்த புகைப்படங்களை பார்க்கும்போது இருக்கிறது என்றும், ப்ளூ கலர் புடவையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றும், ரஜினி தனுஷ் பாணியில் போயஸ் தோட்டத்திற்கு குடியேறிவிட்டீர்கள் என்றும் பல்வேறு கமெண்ட் இந்த புகைப்படங்களுக்கு பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’தி டெஸ்ட்’ மற்றும் யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, நிவின் பாலி உடன் ‘டியர் ஸ்டூடண்ட்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.