மீண்டும் ரஜினி படத்தில் இணைந்த நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,January 31 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்லது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மீனா, குஷ்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்புவும் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இந்த படத்தில் நயன்தாரா இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஏற்கனவே மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில் நயன்தாராவுக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர்? என்று யூகம் செய்யவே முடியாத அளவுக்கு உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி இமான் இசையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

தர்பார்' தோல்விப்படமா? சமூக வலைத்தளத்தில் பரவும் வதந்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் நான்கே ரூபாய் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைக்கா நிறுவனம்

பிக்பாஸ் தர்ஷன் மீது பிரபல நடிகை போலீஸில் புகார்

பிக்பாஸ் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விக்ரமின் 'கோப்ரா' படத்தில் இணைந்த மலையாள இளம் நடிகர்

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கொரோனா வைரஸ் பரவல் : சர்வதேச அவசர நிலை பிரகடனம் – WHO அறிவிப்பு

இந்தியா உட்பட கொரோனா வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவியுள்ளது. இதனை அடுத்து உலகச் சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. 

இதெல்லாம் பக்தியாலும், பயத்தாலும் வருவது: கமல்ஹாசன் டுவீட்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதிய புத்தகம் ஒன்று பிப்ரவரி 2ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த புத்தக வெளியீட்டிற்கு அனுமதி தந்த