அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா.. க்யூட் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் பிசியாக இருக்கும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த ’அன்னபூரணி’ வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் மாதவனுடன் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாரா நடிக்க இருக்கும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது நயன்தாரா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவிடுவது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி மதன் படத்தொகுப்பு பணியை செய்கிறார்
Lady Superstar #Nayanthara from the sets of #MannangattiSince1960 🎥
— Prince Pictures (@Prince_Pictures) November 24, 2023
Shoot in progress, in full swing!@lakku76 @venkatavmedia @dudevicky_dir @iYogiBabu @RDRajasekar @rseanroldan @dhilipaction @MilanFern30 @ganesh_madan @itshravanthi @paalpandicinema @KannadasanDKD… pic.twitter.com/HVuINPOKfx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments