பாஜக பிரமுகரை சந்தித்த நயன்தாரா: அரசியலில் ஈடுபட திட்டமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திலும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் தரிசனம் செய்தார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் திருச்செந்தூரில் நேற்று அவர் முருகனை தரிசித்து கொண்டிருந்தபோது கோவிலில் தற்செயலாக பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் என்பவரை சந்தித்ததாகவும், இருவரும் பரஸ்பரம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன், நயன்தாராவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தங்கள் கட்சியில் இணைய விரும்பினால் தங்கள் கட்சியில் நயன்தாராவை வரவேற்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் தெரிகிறது. இதற்கு நயன்தாரா ஒரு மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாக கூறிவிட்டு ’காலம் வரும்போது பார்க்கலாம்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.
பாஜக முன்னாள் எம்பி ஒருவரை தற்செயலாக சந்தித்தை வைத்து நயன்தாரா அரசியலில் குதிக்கவிருப்பதாகவும், அவர் பாஜகவில் இணையவிருப்பதாகவும் ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் பாஜகவில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments