'தளபதி 63' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,November 25 2018]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட 'மெர்சல்' படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மீண்டும் இணைகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஆம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் இந்த படத்தின் நாயகி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தில் நாயகிக்கு மிகவும் வலிமையான கேரக்டர் என்றும், இந்த கேரக்டருக்கு நயன்தாராவை தேர்வு செய்துள்ளோம் என்றும் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்-நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

அட்லி இயக்கிய முதல் படமான 'ராஜா ராணி' படத்தின் நாயகி நயன்தாரா தான் என்பதும், கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த 'வில்லு' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் நயன்தாரா இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

எது பேசறதா இருந்தாலும் ஜெயிச்சுட்டு பேசு: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

முரட்டு உருவம், மழலை உள்ளம்: அம்பரீஷூக்கு கமல் இரங்கல்

பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து கன்னட திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

பற்றி எரியும் பாரீஸ்: போர்க்களமான பெட்ரோல் விலை உயர்வு போராட்டம்

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தால் அந்நாட்டின் தலைநகர் பாரீஸ் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது.

கஜா புயல் நிவாரண நிதி: அஜித் கொடுத்த தொகை குறித்து தமிழக அரசு அறிவிப்பு

கஜா புயல் நிவாரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு தல அஜித் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

பிரபல நடிகர் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல கன்னட நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரிஷ் நேற்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்து நடிகர் அம்ரிஷ் நேற்று சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது.